Date:

ஜனாதிபதியுடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்துள்ளார் என ஐக்கியத் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய  கொரோனா நிலைமை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ரணில் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசியல் தலைவர்கள் முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஐ.தே.க ஏற்கனவே தங்கள் சொந்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி இந்த கோரிக்கைக்கு சாதகமாக இருந்தார் என்றும் ஆனால் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்ப விடுக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இன்றைய வானிலையில் ஏற்படும் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ...

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு...

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி...

இலங்கை வங்குரோத்தான நாடல்ல, இறக்குமதித் தடை நீக்கப்படும் – ஜனாதிபதி

கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால்...